Sunday, March 2, 2008

தினம் தினம் சந்தோஷம்

நுழைவாயில்

லைகளின் இளவரசி என்று கொடைக்கானலைச் சொல்கிறோம். அதேமாதிரி, ஒன்பது வகையான உணர்வுகளின் இளவரசி என்று சந்தோஷத்தைச் சொல்லலாம்.
சந்தோஷம் என்கிற வார்த்தையே மங்கலத்துடன் சம்பந்தப்பட்டது. எப்பொழுதுமே, சந்தோஷத்தை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டு கூட்டமாக அனுபவிக்கும் பொழுது அது தனி அழகுடன் மிளிரும். அப்பொழுது அந்த சந்தோஷத்தின் அழகே அலாதியானது. சந்தோஷம் இருக்கும் இடத்தில் கலகலப்பு இருக்கும்; அன்பு இருக்கும். முக்கியமாக ஒருவர் அடைந்த பேற்றை இன்னொருவரும் அடைகிற மாதிரி ஒருவொருக்கொருவர் தொற்றிக் கொள்ளும். ஒருவொருக்கொருவர் பகிர்ந்து கொள்கிற மாதிரி ஒரு குழுவே ஆனந்தத்தில் மிதக்கிற உன்னத் அனுபவம் அது.

இதில் முக்கியமானது என்னவென்றால் இயல்பாகவே சந்தோஷம் என்கிற உணர்வு எப்பொழுதுமே ஒருத்தருக்குள்ளேயே வைத்துக் கொண்டு அழுத்திக் கொள்கிற உணர்வு அல்ல. அதை ரொம்ப நேரம் சம்பந்தப்பட்டவரே தனக்குள் வைத்து புதைத்துக் கொண்டிருக்க முடியாது; இன்னொருவருடன் பகிர்ந்து கொண்டால் தான் சந்தோஷம் என்கிற உணர்வு முழுமையடையும். 'யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக' என்று பொதுமை படுத்தி, மற்றவரையும் சம்பந்த்ப்படுத்தி அவருடன் பகிர்ந்து களிக்கின்ற, அடைகின்ற ஆனந்தம் அது.

சந்தோஷம் இருக்குமிடத்தில் ஆரோக்கியம் இருக்கும். உடலின் இரத்த ஓட்டம் சீராகி இதயம் மலரும். அந்த மலர்ச்சியில், உடலே உற்சாகத்தில் திளைக்கும். தனிநபர் உற்சாகம், ஒரு குடும்ப உற்சாகமாக மாறும் பொழுது அக்குடும்பமே மகிழ்ச்சியில் மலர்ந்து ஆனந்தத்தில் அமிழும்.

நல்லவை நடப்பதற்கும் சந்தோஷத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு குழுவிற்கோ அல்லது ஒரு சமூகத்திற்கோ அல்லது நாட்டிற்கோ, நடந்த ஒரு நிகழ்ச்சி நன்மைபய்ப்பதாக இருந்தால், அந்த சந்தோஷத்தின் அலைவீச்சு மிக் பிர்மாண்டமாக பரந்து விரிந்து ஒரு தேசத்தையே திக்குமுக்காட வைக்கும். ஒவ்வொருவரின் இதயத்தையும் வருடி, நாடிநரம்புகளில் பரவி, மகிழ்ச்சிக்கடலில் மூழ்குகிறோம் என்று சொல்கிறோமெ, அந்த
அனுபவம் அது. அப்படிப்பட்ட சந்தோஷத்திற்கு ஆயுசு அதிகம். மக்கள் மனத்திலும் நீண்டகாலம் அது நினைவில் நிற்கும். பல ஆண்டுகள் நினைத்து நினைத்து ம்கிழ்கின்ற சந்தோஷம் அது.

அடக்குமுறையையும், கொடுங்கோலர்களின் அட்டகாசத்தையும் அனுபவித்த ஒரு நாடு, விடுதலை அடைந்து சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கிற ம்கிழ்ச்சியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இப்படிப்பட்ட விடுதலைத் திருநாட்கள், ஒரு தேச்த்தின் சரித்திரத்திலேயே அழியா வண்ணம் எழுதப்பட்டு, பன்னூறு ஆண்டுகளுக்குப் பின்னாலும் நினைவில் நிற்கும் நிகழ்ச்சியாக அமையப்பெறும். ஆகஸ்டு 15-ஐ மறக்கமுடியுமா, நம்மால்?..

இன்னொன்று.

சந்தோஷம் எப்பொழுதுமே மனசு சம்பந்தப்பட்டது. மனம் சம்ப்ந்தப்பட்ட எல்லாமே, அவரவர் அனுபவித்து மகிழ வேண்டியவை. 'அனுபவிப்பு' என்ற ஒன்று
இல்லாமல், வெறும் கற்பனையாகி கனவாகிப் போகுமேயானால், அத்ன் பாதிப்பு அபாயமானதாக இருக்கும். ஒரு பரந்துபட்ட நாட்டின் நியாயமே இதுவென்றால், ஒரு குடும்பத்தில், ஒவ்வொரு தனிமனிதனிடத்தில் மகிழ்ச்சியும், அதனால் ஏற்படுகின்ற சந்தோஷமும் களிப்பும் எந்நேரமும் விலகாமல் படிய வேண்டுமானால், அது சாதாரண விஷயமல்ல.

அந்த அசாதரண விஷயம் கைவரப்பெற, அந்த யோகம் சித்திபெற, நம் குடும்பமும், சுற்றமும், நட்பும் தினம் தினம் சந்தோஷத்தில் திளைக்க வழியிருக்கிறதா?

தனிமனிதன் என்பது குடும்பமாகிறது. குடும்பங்களின் கூ:ட்டம் நாடாகி தேசமாகிறது. தனிமனிதனில் தொடங்கி அவனை உள்ளடக்கிய ஒட்டு மொத்த ம்க்கள் திரள் சந்தோஷமாய் இருப்பது என்பது ஒரு தேசத்திற்கு கிடைத்தற்கரிய பாக்கியம்.

அந்த பாக்கியம் கிடைக்க வழியிருக்கிறதா?

நிச்சயம் இருக்கிறது.

(வளரும்)
Related Posts with Thumbnails